பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

கிழக்கு மாகாண 08 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிறுவனம் நிதியுதவி


US Aid அமைப்பின் நிதியுதவியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதியாக 3,218,000 அமெரிக்க டொலர்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக US Aid அமைப்பு இந்த நிதியை ஒதுக்கியிருந்தது.
தெரிவு செய்யப்பட்ட 08 பாடசாலைகளுக்கு குறித்த நிதியிலிருந்து அபிவிருத்தி நிதி வழங்கி வைக்கப்படும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது அட்டாளைச்சேனை, ஏறாவூர் , கல்முனை- (வெஸ்லி உயர்பாடசாலை), சாய்ந்தமருது , காவத்தமுனை, காத்தான்குடி , சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் பாடசாலைகளுக்கு இத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் இரண்டாம் கட்ட நிதிப் பங்கீட்டின் போது ஏனைய பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அறிவித்துள்ளார்.