பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்! கபே அமைப்பு கோரிக்கை


அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கபே என்ற நியாயமான தேர்தலுக்கான இயக்கம் கோரியுள்ளது.
முன்னைய அரசாங்கம் இந்த சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ததாக கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் முன்னைய அரசாங்கத்தினால், மக்களின் சுதந்திரத்தை நசுக்கவே பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
 ஊடகவியலாளர்களை கைது செய்யவும் குடியியல் உறுப்பினர்களை காலவரையறையில்லாமல் தடுத்து வைக்கவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் நாட்டில் இருந்து 6 வருடங்களுக்கு முன்னர் ஒழிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் அமைதி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனில் ஏன் இன்னமும் பயங்கரவாத சட்டத்தை அமுல் செய்ய வேண்டும் என்று தென்னக்கோன் கேள்வி எழுப்பினார்.