பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2015

.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு: 20 இடங்களில் சோதனை



வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 16 பேர் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ராசாவின் வீடு உட்பட 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், ராசாவின் நண்பரும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநர் ரஹானா பானு (2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட சாதிக்பாட்சாவின் மனைவி) உட்பட 16 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ அதிகாரிகள் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக்பாட்சா வீடு, தி.நகரில் உள்ள கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அலுவலகம் உட்பட 6 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், பெரம்பலூரில் 8 இடங்களிலும், திருச்சியில் 3 இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.