பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2015

காங்கிரஸ் எம்.பி.,க்கள் 27 பேர் சஸ்பெண்ட்



பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது. லலித்மோடி, வியாபம் ஊழல் விவகாரத்தால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடக்கி வருகின்றன, இந்த நிலையில் லலித்மோடி, வியாபம் விவகாரத்தால் பாராளுமன்றம் இன்றும் முடங்கியது. 

மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் பெயர்களை வாசித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவர்களை இருக்கையில் அமருமாறு தெரிவித்தார். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சபாநாயகரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் பலர் கூச்சலிட்டலிட்டனர். இதனையடுத்து காங் எம்.பி.,க்கள் 27 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவையையும் நாளை (ஆகஸ்ட் 4) வரை ஒத்திவைத்துள்ளார்.