மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமான வாக்குகள் பதிவு |
வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் இன்று காலை முதல் மாலை வரை சுமூகமான முறையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம் பெற்று வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமான வாக்குகள் பதிவாகியள்ளதாக மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலகர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்ற வாக்களிப்பின் போது பாரிய அளவிலான எவ்வித அசம்பாவிதங்களும் இடம் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் பின்னர் முடிவுகள் கட்டம் கட்டமாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புடன் சேர்த்து 70.9 வீத வாக்குப் பதிவு
கிளிநொச்சி தபால்மூல வாக்களிப்புடன் சேர்த்து, ஒட்டுமொத்த வாக்களிப்பு வீதமாக 70.9 பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி 66.5 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼