த தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஒன்று திருகோணமலை துரைரத்தினசிங்கத்துக்கு மற்றது அருந்தவபாலனுக்கும் சாந்தி ஸ்ரிஷ்கந்தராசாவுக்கும் பாதி பாதி
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு இரண்டரை வருடம் என்றும் மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன . சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நாளை 10 மணிக்கு இம்முடிவு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது .