பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி



இசையமைப்பாளர் இளையராஜா (வயது 72) உடல்நலக்குறைவால் மீண்டும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்பில் அசௌகரிய உணர்வு, வலி காரணமாக இளையராஜா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் இருதய ரத்த நாளங்களில் பாதிப்பு இல்லாத தன்மை தெரியவந்தது. எனினும் இரைப்பை-குடல் அமில பாதிப்பு பிரச்னை காரணமாகவே அவருக்கு மார்பில் அசௌகரிய நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அண்மையில் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இரைப்பை-குடல் அமில பாதிப்பு பிரச்னைக்கு மருத்துவ ஆலோசனை பெற இளையராஜா, அப்பல்லோ மருத்துவமனைக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) மீண்டும் சென்றார். இரைப்பை-குடல் அமில பாதிப்பு தொடர்பாக உரிய மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதற்காக அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.