பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2015

சசிபெருமாளின் உடலை வைகோவுடன் சென்று பெற்ற உறவினர்கள்




மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சசிபெருமாளின் உடலை பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் சசி பெருமாளின் மகன் நவநீதன், தம்பி செல்வம் ஆகியோர் சென்றனர். அங்கு அவரது உடலை பெற்ற அவர்கள் சேலம் திரும்பினர்.

சசிபெருமாளின் உடல் நல்லடக்கம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் சேலம் மாவட்டம் இ.மேட்டுக்காடு கிராமத்தில் சசிபெருமாள் குடும்பத்தினரின் சொந்த நிலத்தில் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.