பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2015

ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

சென்னையில் நாளை நடக்கவுள்ள சர்வதேச நெசவாளர் தினவிழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்
என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா, சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று நெசவாளர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கிட உள்ளார்.

தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி,  நிகழ்ச்சி முடிந்த பின்னர், மதியம் 12.40 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் சென்று முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 இச்சந்திப்பை தொடர்ந்து அவர் டெல்லிக்குப் பயணமாகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது