பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2015

விஜயகலாவை கைது செய்யுமாறு வலியுறுத்து


பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை உடனடியாக கைது செய்யும்படி பொலிஸ் மா அதிபரை தான் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ.சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விஜயகலா மகேஷ்வரன், புலிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், தனது தேர்தல் சுவரொட்டிகளில் ஈழ வரைபடத்தை அச்சிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக விஜயகலா கைது செய்யப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.