பக்கங்கள்

பக்கங்கள்

7 ஆக., 2015

எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில் தமிழர்கள் இருவர் கைது


ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவை கடத்திச் சென்றதாக கூறப்படும் தமிழர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வு பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டு சேவை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து காணாமல் போயிருந்த ஊடகவியலாளரை குறித்த தமிழ் இளைஞர்களை வைத்தே கடத்திச் சென்றதாக அண்மைய நாட்களாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையிலேயே அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர் என அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ் இருவரினால் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட எக்னேலியகொட, மின்னேரிய இராணுவ முகாமில் இரண்டு இராணுவ கேர்ணல்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு இராணுவ கேர்ணல்களையும் இன்று கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் எக்னெலிகொடவை கடத்திச் செல்ல வந்த குழுவினரால் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியில் இருந்து பக்கமூன பிரதேசத்தில் வைத்து இறுதி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.