பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

மத்திய மாகாண சபை அதிகாரம் கைமாறுமா? முதலமைச்சராகத் துடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்


மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மாகாண சபை அதிகாரம் கைமாறும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய மாகாண சபையில் ஆளுங்கட்சிக்கு 36 உறுப்பினர்கள் உள்ளனர்.
மொத்த உறுப்பினர்களில் 21 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் காரணமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பக்கம் திரும்பியுள்ளதுடன், அவரை முதலமைச்சராக ஆக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதன் பிரகாரம் மாகாண சபையில் தமக்கு 33 பேரின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
எனவே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து எதிர்வரும் வாரங்களில் மாகாண சபை அதிகாரத்தைக் கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ள வெற்றியும் இதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.
எனினும் மாகாண சபையில் தொடர்ந்தும் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்