பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

இன்று முதல் இயங்குகிறது நாடாளுமன்ற தகவல் கருமபீடம்


நாடாளுமன்ற உறுப்பினர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் கருமபீடம் இன்று முதல் இயங்கவுள்ளது.
 
இன்று தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 3.30 மணிவரை இந்த தகவல் கருமபீடம் செயற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டுவருமாறு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும்இ றறற.pயசடயைஅநவெ.டம   எனும் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தையும் பூர்த்திசெய்து கொண்டுவருமாறு கேட்டுகொண்டுள்ளார்.
 
இதேவேளை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படமும் இந்நாட்களில் எடுக்கப்படுமென்பதால் அதற்கும் தயாரான நிலையில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.