பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2015

தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு அனுமதி


தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஒப்பந்தம் இன்று பகல் கைச்சாத்திடவுள்ள நிலையில் பிரதமரின் பதவி பிரமாண நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கமைவான கலந்துரையாடலுக்காக முன்னணியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அநுர பிரியதர்ஷன யாப்பா, அத்துடன் முன்னணியின் சிரேஷ்ட தலைவரான தினேஷ் குணவர்தன ஆகியோரின் பங்களிப்புகளும் கிடைத்துள்ளதாக குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
இச் செயற்பாட்டிற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முன்னணியின் அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளதோடு, ரணில் விக்ரமசிங்க பிரமராகவும், முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் துணை பிரதமராகவும் நியமிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.