பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2015

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற முன்னணி முக்கியஸ்தர் ஐ.தே.கவில் இணைய ஆயத்தம்?


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய ஆயத்தமாகவதாக தெரியவந்துள்ளது.
சிங்கள பத்திரிகை ஒன்றில் இது தொடர்பில் செய்து வெளியாகியுள்ளது.
நல்லாட்சியில் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு குறித்த நபர் ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மலிக் சமரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும், இது குறித்து அவர் பிரதமரிடம் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.