பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

ஜனாதிபதி வசமானது நான்கு அமைச்சுக்கள்


சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
மைத்திரி இவ்வாறு அறிவித்துள்ள நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமுள்ளன.
 
அமைச்சரவையை 30பேருக்குள் மட்டுப்படுத்துவதற்கு உறுதியளித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமையினால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.