பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

கடற்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டார் மைத்திரி


திருகோணமலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் சென்றுள்ளார்.
 
இதன்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படகுகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.
 
அத்துடன் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின்மூலம் துறைமுகப் பகுதியையும் ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டார்.
 
மேலும் சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் திருமலை சென்றிருந்தார்.
 
அதன்படி குறித்த நிகழ்வையடுத்தே ஜனாதிபதி நேற்று குறித்த இடங்களுக்குச் சென்றுள்ளார்