அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக காமன்வெல்த் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை, முழுக்க, முழுக்க, இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் பகுதியில், வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வைகோ உள்ளிட்டோர்களை கைது செய்துள்ளனர்.