பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2015

கடும் நிபந்தனையுடன் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது ஐ.நா அறிக்கையின் பிரதி

ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே
, இலங்கை அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சு மூலம் இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜெனிவா சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகளும், கொழும்பிலுள்ள அதிகாரிகளும், ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும்இ இந்த அறிக்கை தொடர்பாக, இலங்கை அரசாங்கமும், ஐ.நாவும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றன. 

அறிக்கையின் உள்ளடக்கம், கண்டறிவுகள், பரிந்துரைகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியில் கசியவில்லை.

அதிகாரபூர்வமாக இந்த அறிக்கையைத் தாம் வெளியிடுவதற்கு முன்னர், வெளியே கசிவதை ஐ.நா விரும்பவில்லை என்றும், அதனால், உள்ளடக்கம் பற்றிய எந்த தகவலும் வெளிவரக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்திடம், அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும்இ இந்த அறிக்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.