கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே வீரமணி என்பவரது மகள் ரமணிதேவி அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப்பட்டம் படித்துவந்துள்ளார்.
அதே கல்லூரியில் படித்து வரும் வேறு சமூகத்தில்பட்ட சபாபதி என்பவரை ரமணிதேவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ரமணிதேவியின் குடும்பத்தினர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காட்டுமன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவரவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்துள்ளனர்.
இதனிடையே, சபாபதியுடன் மீண்டும் காதலை புதுப்பித்துக் கொண்ட ரமணியை அவரது தாத்தா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ரமணிதேவி இதுகுறித்து கவலைப்படாமல் தொடர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பேச்சை கேட்காத பேத்தியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தாத்தா அப்பகுதியில் உள்ள காவற் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இப்பகுதியில் இதுபோன்று சாதி தொடர்பான கொலைகள் அடிக்கடி நிகழ்வதாக குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள்,
அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
|