பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விரைவில் இலங்கைக்கு விஜயம்


இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரதமரின் அழைப்பின் பேரிலே இவர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரதமரின் இவ்வழைப்பானது இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மானில பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் இந்திய புகையிரத சேவை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரையும் நேற்று மாலை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.