பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015

சாமரவின் இடத்துக்கு லக்ஸ்மன் செனவிரட்ன


ஊவா மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள சாமர சம்பத்தின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன நியமிக்கப்படவுள்ளார்.
இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செனவிரட்னவே பதுளை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பட்டியலில் அடுத்தவராக உள்ளார்.
எனவே அவரே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என்று திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாமர சம்பத் கடந்த தேர்தலில் 64, 418 வாக்குகளை பெற்றார்.
லக்ஸ்மன் செனவிரட்ன ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இணைந்து பின்னர் சீனி தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.