பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதி மசோதா ஒன்று தொடர்பில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தின் குறைநிரப்புப் பிரேரணைகள் இன்று நிதி மசோதாக்களாக நாடாளுமன்ற அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதத்திற்கு முன்னரே இதற்கான நாடாளுமன்ற அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும் அப்போது அதிகாரத்தில் இருந்த 100 நாள் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் காரணமாக நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் தாமதமேற்பட்டிருந்தது.
இன்று குறித்த நிதிமசோதாக்கள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். எனினும் குறித்த நிதிமசோதாக்கள் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்துடனோ, அரசாங்கத்தை நடத்திச்செல்வதிலோ எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.