பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2015

பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை! கல்வியமைச்சு


பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதனை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புக்களை தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. இதனால் பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்கின்றனர்.
இதனை நிறுத்தும் வகையில் தனியார் கல்வி நிறுவங்களில் நடத்தப்படும் வகுப்புக்களை முழுமையாக தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இது தொடர்பான முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.