பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2015

யாழில் நடைபெறும் காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்பார்!


யாழ்.மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்வரும், ஒக்ரோபர் 2ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் சர்வதேச அஹிம்சை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில்  இந்தியத் துணைத்தூதுர் கே.நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.
இந்த நிகழ்வில் கவிஞர் சோ.பத்மநாதன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தயானந்தராஜா, பேராதனை பல்கலைக்கழக மாணவி கே.தயாளினி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்