பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2015

பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை


த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஜெனிவாவில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வயர் அவர்களோடு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பில் இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எற்பட்டுத்தப்படவிருக்கும் அனைத்துப் பொறிமுறைகளிலும் முழுமையான சர்வதேச ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கூறினார்.
அத்தோடு வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படடுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள், வேறு அரசாங்கங்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் இவ்விடயத்தில் அக்கறையுள்ள அனைவரோடும் பொறுப்புகூறல் சம்பந்தமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கின்ற கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும்.
எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன்
பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது முழுமையான சர்வதேச விசாரணை என்பதுதான் உண்மை.
இவ்வாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.