பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2015

செய்மதி தொலைத் தொடர்புகளை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
சார்க் நாடுகளுக்கு இடையில் செய்மதி தொலைத்  தொடர்புகளை பரிமாறிக்கொள்வது தொடர்பில் முதலாவது புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனுசரணையில் இலங்கையில் சிறு கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இரண்டாவதாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.
200 கட்டில்களை கொண்ட வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல், இலங்கை அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையை ஏற்படுத்துதல் ஆகிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.