பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

கல்வியினை தொடருவதற்காகவே திருடினேன்! தனியார் வங்கி கொள்ளை சந்தேக நபர் வாக்குமூலம்


கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக, வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக தனியார் வங்கி கொள்ளை சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாணந்துறை தனியார் வங்கி கிளை ஒன்றில் ஐந்து லட்சம் ரூபா பணம் கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரை, 7 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே சந்தேக நபர், தான் ரஷ்யாவின் மொஸ்கவ் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்றதாகவும், கல்வியை தொடர்வதற்கான நிதி இல்லாததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நாடு திரும்பியதாகவும், எனது கல்வியினை தொடருவதற்காகவே திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.