பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

வட கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையை அரசு உணர வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்


வட கிழக்கு பகுதிகளில் தொடரும் ராணுவத்தின் ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உண்மையான சமரசத்தை நாடுவதற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையின் பின் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனால் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் பிழைத்திருப்பவர்களும் நீதியை நாடுவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச சமூகம் இதுகுறித்து உணர்ந்து சீரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றார்