பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2015

கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராகும் இலங்கை?


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம் ஒப்படைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தியா கோரிக்கை விடுத்தால், கே.பி ஒப்படைக்க தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில் இந்திய பொலிஸாருக்கு, கே.பி முக்கியமான நபராகும். கே.பி தற்போது வரையிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பை பெற்று வருகின்றார்.
அவர் 2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி மலேசியாவில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு ஊடாக கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.