பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2015

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது.
இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் மதி. அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக சபாநாயகரிடம் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு மேலும் தீர்மானம் எடுத்திருக்கின்றது.