பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2015

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு


புதிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அத்துடன், சபை முதல்வராக லக்ஷமன் கிரியெல்லவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலக்கவும் தெரிவுசெய்யபட்டுள்ளனர்.

இவர்கள் எவ்வித ஆட்சேபனைகளும் இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.