பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் பூரண ஆதரவு அளிக்கவேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்


உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளுடனான கலப்பு நீதிமன்றத்துக்கான யோசனைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் பூரண ஆதரவளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், இந்த கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக நியாயம் கிடைக்கும் சிறந்த வழியாக அமையும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா பணிப்பாளர் ஜோன் பிஷர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தின் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்