பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

ஜெயலலிதாவை கருணாநிதி பாராட்டியுள்ளார்


போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தமது வரவேற்பை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறிமுறையை மாத்திரம் முன்னெடுக்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளமை கண்டிக்கத்தது.
இந்தநிலையில் இதற்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தமது தீர்மானத்துடன் இசைந்துசெல்கிறது.
எனவே இந்த விடயத்தை தாம் வரவேற்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.