பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2015

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது இளந்தாரகை அணி

cricket2
கிளிநொச்சி முரசுமோட்டை முரசொலி கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களின் அழைக்கப்பட்ட 26 கழக  அணிகளுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட தொடரில் வெற்றிக்கிண்ணம் தர்மபுரம் இளந்தாரகை அணி வசமானது.
ilantharakai1
குறித்த போட்டி நேற்று கிளிநொச்சி முரசுமோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
கிளி.உதயசூரியன் அணியும், கிளி.தர்மபுரம் இளந்தாரகை அணியும் இறுதிப் போட்டியில் மோதியது.
முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளி.உதயசூரியன் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.54 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தர்மபுரம் இளந்தாரகை அணி 54 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
மேலும் போட்டியின் ஆட்டநாயகனாக தர்மபுரம் இளந்தாரகை அணியின் கீர்த்திகன் தெரிவானார்.