பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2015

எமக்காய் உயிர்தியாகங்களை ஈகம் செய்யும் தமிழகமே உதவ வாருங்கள் : அடைக்கலநாதன் மன்றாட்டம்

எமக்காய் உயிர் தியாகங்களை ஈகம் செய்துவரும் தமிழகமே மீண்டும் எமக்காய் குரல்கொடுத்து நீதியை பெற்றுத்தாருங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா இலங்கைக்கு சார்பான தன்மை கொண்டிருப்பதாகவும் இந்தியாவின் நிலைப்பாடும் அத்தகையதாக அமையப்பெற்றிருக்கும் நிலையில் துர்பாக்கியகரமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி மறைக்கப்படும் நிலையே காணப்படுவதாகவும்   செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழருக்காய் எப்போதுமே உயிர் தியாகங்களையும் அழுத்தங்களையும் பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து ஈழத்தவர்களின் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றதைப்போல் இனவழிப்பு நடவடிக்கைக்கான நீதியையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் பெற்றுத்தர இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களை வழங்குங்கள் எனவும் மன்றாட்டமாக அவர் கோரியுள்ளார்.
தமிழினத்தின் விடுதலைக்காக எழுர்சியுடன் செயற்படும் தமிழகத்தையும் புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளையுமே இலங்கைவாழ் தமிழ் மக்களும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் நம்பியிருப்பதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்தியா ஜனநாயகத்தை போதிக்கின்ற நாடு என்றும் எம் இனத்தின் மீது துன்பங்களை மட்டுமே கட்டவிழ்து விட்ட அரசை  மற்றும் குற்றவாளிகளை தண்டிக்கும் விதத்திலும் நீதியை தமிழினத்திற்கு பெற்றுக்கொடுக்கும் விதமுமாகவும் இந்தியாவின் ஆதரவு தமிழ் மக்கள் சார்பாக அமையவேண்டுமெனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.