பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! சிவாஜிலிங்கம்

தமிழின இனப்படுகொலைக்கு வலுவான சர்வதேச நீதி விசாரணை ஒன்றை இந்திய அரசாங்கமே தீர்மானமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஈழத்தமிழர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இந்திய அரசாங்கமே வலுவான ஒரு சர்வதேச விசாரணையை தீர்மானமாக முன்னெடுக்க வேண்டுமென தமிழக சட்டமையில் தீர்மானம் ஒன்று தமிழக முதலமைச்சர் ஜெயராம் ஜெயலிலதா கொண்டு வந்தார்.
இத் தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சருக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக தாம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.