பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2015

பிரிகேடியர் விமானநிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினார்


இராணுவத் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன பாதுகாப்பாக விமானநிலையத்திலிருந்து வெளியேறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிவேரிய, ரதுபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கினார் எனக் கூறப்படும் இவர் இலங்கைக்கான துருக்கி தூதுவராலயத்தில் கடமையாற்றி வந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (15) இவர் இலங்கை வரவுள்ளதாக அறிந்து தெரிபெஹெ ஶ்ரீதம்ம தேரர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்புடன், இவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று பிற்பகல் வேளையில் இலங்கை வந்தடைந்தார்.