பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2015

செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் ஜெனிவா பயணம்


ஜெனீவாவில் நடை பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா நோக்கிய பயணமாகவுள்ளார்.
அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கவிந்திரன் கோடீஸ்வரனும் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளார்.