பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று விஜயின் வீடு, அலுவலகம், புலி படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள்.
கேரள மாநிலம் கொச்சி, திருவல்லாவில் உள்ள நடிகை நயன்தாராவின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்திய நிலையில் இன்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும், நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தியுள்ளனர்.