பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

போக்ஸ்-வாகன் கம்பெனியையே புரட்டிப் போட்ட தமிழர் இவர் தான் 5 நாட்களில் 25 பில்லியனை

சமீபத்தில் போக்ஸ் பேகன் கம்பெனி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. சிக்கல் என்பதனை விட இவர்கள் தயாரித்த காரில் பெரும் ஊழல்
நடைபெற்றுள்ளது என்பது தான் முக்கியமான விடையம். இதனை கண்டு பிடித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்புவீர்களா ? அமெரிக்காவில் உள்ள தமிழர் கண்டு பிடித்த இந்த விடையத்தால் கடந்த 5 நாட்களில் போக்ஸ் பெகன் கம்பெனி 25 பில்லியன் டாலரை இழக்க நேரிட்டது , பங்குச் சந்தையில் அடிமட்டத்தை அடைந்துள்ளது. கார் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த ராட்சச கம்பெனி செய்த ஊழல் எவ்வாறு தெரியவந்தது ? வாருங்கள் சுவாரசியமான இந்த விடையத்தை தருகிறோம்,
அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம்.அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்றுக் கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை. அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
அவர் காரைச் செலுத்திய போது அது அதிக புகையைக் கக்கியது என்பதனை அவர் அவதானித்து விட்டார். புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு அதிகமாக இருந்தது. இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகை வெளியேறியிருக்கிறது. ஆனால் தர நிர்ணயச் சோதனைகளிலெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள். அது எப்படி? என்ற குழப்பத்திற்கான விடையைத் தேடுகையில் தான் அரவிந்த், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக் கண்டறிந்திருக்கிறார்.
காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (LEAD) சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன் வாய்ந்த ஒரு மென்பொருளை இந்த வாகனங்களில் பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.இதைக் கண்டறிந்த உடன், தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவராக, உடனடியாக புகார் பதிவு செய்துள்ளார் அரவிந்த். இதைத் தொடர்ந்து, உலக ஊடக வெளியில் பட்டவர்த்தனமாக அம்பலமானது ஃபோக்ஸ்வாகன் ஊழல். இந்த அவமானத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர்கோர்ன், இந்த மோசடிக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.
மேலும், ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், பங்குச்சந்தையில் தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக்கள் இழந்து, அடிமட்டத்தை அடைந்துள்ளது