பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2015

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் நியமனங்களை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உறுதி அளித்தார். வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியயர்களினால் வடமாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தாம் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் நிலையில், தமக்கு நிரந்திர நியமனம் வழங்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு உறுதி அளித்தார். அது தொடர்பில் மேலும் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், மத்திய கல்வி அமைச்சருடன் இது தொடர்பில் பேசப்பட்டது. தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே ஆறு மாத காலத்திற்குள் உங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதனை அடுத்து போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தினை கைவிட்டனர். விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது.


புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி சேனநாயக்க நம்பிக்கை கொண்டிருப்பதாக, அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட சகல வாக்குகளையும் எண்ணுவதன் மூலம் தமது நம்பிக்கையை உறுதி செய்வதே, தனது கட்சிக்காரரின் தேவையாகும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.
இதன்போது தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக பிரசன்னமாகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் நேரியன் பிள்ளை, அந்த மனு தொடர்பான அறிவித்தலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
இதன் பிரகாரம் தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பிரதிவாதிகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.