பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2015

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாதத்திற்குள் நியமனம்: உறுதியளித்தார் கல்வி அமைச்சர்

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் நியமனங்களை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண கல்வி
அமைச்சர் த.குருகுலராஜா உறுதி அளித்தார்.

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியயர்களினால் வடமாகாண சபைக்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தாம் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் நிலையில், தமக்கு நிரந்திர நியமனம் வழங்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.
அது தொடர்பில் மேலும் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், 
மத்திய கல்வி அமைச்சருடன் இது தொடர்பில் பேசப்பட்டது. தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
எனவே ஆறு மாத காலத்திற்குள் உங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதனை அடுத்து போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தினை கைவிட்டனர்.