பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து : இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்

தாய்லாந்தின் போதரம் பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு
தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தானது இன்று  பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டாமொன் சாஜூவக் மிதக்கும் சந்தைப் பகுதியிலிருந்து குறித்த வாகனம் திரும்பிக்கொண்டிருக்கும்போது, வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக போதரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தில் 34 பேர் பயணித்ததாக குறிப்பிட்ட பொலிஸார், இலங்கையர்களே அதிகமாக காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான தாய்லாந்தைப் சேர்ந்த வாகன சாரதி, போதரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.