பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

எம்.பிக்களுக்கு துப்பாக்கிப் பிரயோகப் பயிற்சி

புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 கடுகுருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமில் கடந்த இரு நாட்களாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  மிகவும் வெற்றிகரமாக இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக கண்டி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.