பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2015

நம்பிக்கையில்லா பிரேரணை சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதை: மாவை எம்.பி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா
பிரேரணை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையானது, சிங்கள ஊடகங்களின் கட்டுக்கதையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் கிடையாதெனவும், அவ்வாறு எவரும் பேசவில்லையெனவும் தெரிவித்த அவர், சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்களிடையே திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்கள் இவ்வாறான செய்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடமாகாண சபையூடாக மக்கள் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மேலும் வடமாகாண சபையின் சமூகமான செயற்பாடுகள் என்பன குறித்து விரைவில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், வடமாகாண, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.