பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2015

உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகிய இருவருக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டதையடுத்து சித்ராங்கனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1981ஆம் ஆண்டுமுதல் இலங்கை வெளிவிவகார சேவையில் சித்ராங்கனி கடமையாற்றி வருவதோடு, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் ஏற்கனவே உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளிவிவகார சேவையில் பணியாற்றிவரும் சுகீஸ்வர குணரட்னவின் பெயர், பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.