பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

முன்னாள் காதலன்தன்னோடு காதலி இருந்த முகநூலில் பதிவேற்ற இந்நாள் கணவனோடு வாழ்ந்த பெண் தற்கொலை


திருமணத்திற்கு முன்னர் காதலித்த நபருடன் எடுத்த புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால், இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பிங்கிரிய திசோகம பிரதேசத்தில் நடந்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னர், முன்னாள் காதலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவேற்றியுள்ளார்.
இந்த விடயத்தை அறிந்து கொண்டதால் மிகவும் மனவருத்தத்திற்கும் வெட்கத்திற்கும் ஆளான 25 வயதான இளம் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திசோகம, வெலங்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம். அனுஷா மதுவந்தி என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெற்ற மரண பரிசோதனையின் போது, பெண்ணின் மூத்த சகோதரரான ஆர்.எம். அமித் சஞ்சீவ என்பவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் எனது இளைய சகோதரி, அவர் ஒரு மாதத்திற்கு மு்னனர் வெங்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்துன் ஜீவந்த என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
எனது தங்கை திருமணத்திற்கு முன்னர் வேறு ஒருவரை காதலித்திருந்ததை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே நான் அறிந்து கொண்டேன்.
அந்த நபர் முன்னர், எனது தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டி தங்கையை அச்சுறுத்தி வந்துள்ளார்.
சஜித் சாகர என்ற அந்த நபர் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்ததை நான் பார்த்தேன். இதனை தங்கையும் அறிந்து கொண்டுள்ளார்.
இது குறித்து எமது குடும்பத்திரும், தங்கையின் கணவரும் கலந்து பேசி, சஜித் சாகர என்ற நபருக்கு எதிராக காவற்துறையில் முறைப்பாடு செய்ய தீர்மானித்தோம்.
நேற்று எனது தாய், மாமா ஆகியோர் தங்கையுடன் பிங்கிரிய காவற்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இதன் பின்னர், தங்கையை அழைத்துச் சென்று வெங்கொல்லவில் உள்ள அவரது கணவரின் வீட்டில் விட்டு விட்டு, நாங்கள் வீடு திரும்பினோம்.
இதன் பின்னர், தங்கை அறையொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டுள்ளதாக எமது மாமாவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்றோம், அப்போது தங்கை அறையொன்றில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார்.
கழுத்தில் இருந்த சுருக்கு பட்டியை கழற்றி விட்டு, வாகனம் ஒன்றில் தங்கை பிங்கிரிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம்.
தங்கையின் உடலை பரிசோதித்த மருத்துவர் தங்கை இறந்து விட்டதாக கூறினார் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மரண விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.