பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.



இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.
கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியை வட மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வட மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் பங்கேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சமாதானத்தை கொண்டு வருவார்!  விக்னேஸ்வரன் நம்பிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு சௌபாக்கியத்தையும் சமாதானத்தை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தனக்கு இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெரும்பான்மை மக்கள் மரமாகவும் சிறுபான்மை மக்கள் அதன் கிளைகளாகவும் இருக்க வேண்டும் என சில நபர்கள் எண்ணுகின்றனர்.
எனினும் வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மையினர் தொடர்பில் இவ்வாறு அங்குள்ள பெரும்பான்மை மக்கள் எண்ணவில்லை.
வடக்கு,கிழக்கில் உள்ள மக்கள் அந்த பிரதேசத்தில் பெரும்பான்மை இன மக்களாக உள்ளனர் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.