பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2015

ஆயுதக் கொள்வனவு மோசடி வழக்கிலிருந்து பொன்சேகாவின் மருமகன் தனுன விடுதலை


இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது நிதி மோசடி வழக்கிலிருந்து தனுன திலகரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சரத் பொன்சேகாவின் மகளது முன்னாள் கணவரான இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
இதன்படி 4 லட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் இவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டிருந்தமையினை தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு நடைபெறும் வரை இவர் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இவ் வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து 2012 மார்ச் 15ம் திகதி பொன்சேகாவும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது